#Breaking: காவேரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; மறந்தும் அந்த பக்கம் போயிடாதீங்க.!



TN Govt Warning to 11 Delta Districts Kavery River Water Discharge 


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மேட்டூர் அணையின் நீர்மட்டம் என்பது வெகுவாக குறைந்து இருந்தது. கர்நாடகா மற்றும் சேலம் மாவட்டத்தின் மேட்டூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைந்திருந்தது. 

தென்மேற்குப்பருவமழை தீவிரம்

இதனிடையே, இந்தியாவில் வலுப்பெற்றுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்தவகையில், காவேரியின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் நல்ல மழை பெய்தது. 

இதையும் படிங்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு; இன்றைய விலை நிலவரம் இதோ.! 

இதனால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில், அணையின் நீர்மட்டம் 116 அடியை நெருங்கிவிட்டது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி என்ற நிலையில், இன்னும் சில நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்ந்து ஏற்கனவே டெல்டா பாசனத்திற்காக 16000 கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியற்றப்படும் நிலையில், அணையின் கொள்ளளவு முழுமையை சந்திப்பதால் எந்நேரமும் கூடுதல் உபரி நீர் திறந்து விடப்பலடலம் என தெரியவந்துள்ளது. இதனால் காவேரி கரையோரம் அமைந்துள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அறியலூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காவேரி ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் காவேரி ஆற்றுக்குள் செல்ல வேண்டாம், ஆற்றில் குளிக்க வேண்டாம். நீர் நிலைகளை அலட்சியமாக கடக்க முயற்சிக்க வேண்டாம். தாழ்வான இடங்களில் இருப்போர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.5 இலட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்; குவியும் பாராட்டுக்கள்.!