வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
'என்ன கொடுமை இது.?" 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 65 வயது முதியவர் மீது பாய்ந்த போக்சோ.!
வட சென்னையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
வடசென்னை புது காமராஜர் நகர் 4-வது தெருவை சேர்ந்த 6 வயது சிறுமியை பெற்றோர் அருகில் உள்ள பெட்டி கடைக்கு சென்று வருமாறு அனுப்பி இருக்கின்றனர். சிறுமி பெட்டி கடைக்கு சாமான் வாங்க சென்ற போது பாண்டியன் என்று 65 வயது முதியவர் சிறுமியை வழிமறித்து இருக்கிறார்.
பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அழுது கொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி நடந்துவற்றை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த முதியவர் பாண்டியனை கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.