திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
கல்விச்சான்றிதழை தவறவிட்ட நபர்; ஓட்டுனரின் நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு.!

இராமநாதபுரத்தை சேர்ந்தவர் இரா. முனியராஜ். இவர் அரசுப்பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தற்போது மதுரை - இராமநாதபுரம் வழித்தடத்தில், இடைநிலா பேருந்து ஓட்டுநராக இருக்கிறார்.
கடந்த மார்ச் 10, 2025 அன்று, மதுரையில் இருந்து பேருந்து இராமநாதபுரம் நோக்கி பயணம் செய்தது. அப்போது, ஓட்டுனருக்கு தொடர்ந்து ஒரு நம்பரில் இருந்து பலமுறை அழைப்புகள் வந்துள்ளது.
இதனால் சத்திரக்குடி சுங்கச்சாவடி பகுதியில் வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர், செல்போன் அழைப்பை ஏற்று பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க: 7 வயது சிறுவன் கண்மாய் நீரில் மூழ்கி பலி.. பெற்றோர் கண்ணீர்.!
ஓட்டுனரின் நெகிழ்ச்சி செயல்
அப்போது, மறுமுனையில் பேசிய நபர், தான் மதுரையில் இருந்து இராமநாதபுரம் நோக்கி உங்களின் வகணத்தில் பயணம் செய்தேன். எனது கல்வி சான்றிதழ் அடங்கிய பை பேருந்தில் இருக்கிறது என கூறியுள்ளார்.
இதனையடுத்து, அதனை பத்திரமாக எடுத்து வைத்தவர், இரவு 07:10 மணிக்கு மீண்டும் இராமநாதபுரம் வந்து நபரின் பைலை ஒப்படைத்தார். இதனால் நெகிழ்ந்துபோன நபர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
ஓட்டுனரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: தொழிலதிபர் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் துள்ளத்துடிக்க முகம் சிதைத்து படுகொலை; பரமக்குடியில் பகீர்.!