Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
திமுக கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு காட்டுவார்கள் - அண்ணாமலை ஆவேசம்.!
ஆளுநரை வசைபாடி போஸ்டர் அடிக்க அனுமதி உண்டு. ஆனால், முதல்வர் குறித்து கருத்தியல் மோதினால் கைது செய்கிறார்கள் என அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், அதிமுக, பாஜக, பாமக, நாதக ஆகிய கட்சிகள், பல்கலைக்கழக வளாகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்த முற்பட்டன. வெவ்வேறு நாட்களில் நடந்த இந்த போராட்டத்தில், அங்கு கூடியிருந்தவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போராட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனிடையே, இன்று திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசை, ஆளுநர் ஆர்.என் ரவி வஞ்சிப்பதாகவும், தமிழக மக்களுக்கு விரோத செயல்களை அவர் செய்வதாகவும் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு, அதுதொடர்பான போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. ஆளும் அரசு நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் பாமக தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநரின் செயல்பாட்டுக்கு கண்டனம்; தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்.!
அண்ணாமலை கண்டனம்
இந்த விஷயம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில், "திமுக ஆட்சியில், எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு. ஜனநாயக ரீதியாக, சுவரொட்டிகள் மூலமாகக் கூட எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அனுமதி இல்லை, ஆனால் மாண்புமிகு ஆளுநரையும் எதிர்க்கட்சிகளையும் வசைபாடும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு திமுக பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பின்மை என, தமிழகம் முழுவதும் திமுகவினர் குற்றங்கள் செய்து கொண்டிருக்க, காவல்துறை, சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் தமிழகம், அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில்,
— K.Annamalai (@annamalai_k) January 7, 2025
எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு.
ஜனநாயக ரீதியாக, சுவரொட்டிகள் மூலமாகக் கூட எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அனுமதி இல்லை, ஆனால் மாண்புமிகு ஆளுநரையும் எதிர்க்கட்சிகளையும் வசைபாடும்…
இதையும் படிங்க: அந்தர்பல்டி அடித்த திருமாவளவன்.. அண்ணா பல்கலை., விவகாரத்தில் முதல்வரை சந்தித்து பகீர் பேட்டி.!