அந்தர்பல்டி அடித்த திருமாவளவன்.. அண்ணா பல்கலை., விவகாரத்தில் முதல்வரை சந்தித்து பகீர் பேட்டி.!



Thirumavalavan Pressmeet on 06 Jan 2025 


சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 19 வயது மாணவி, கடந்த டிச.24 அன்று, கல்லூரி வளாகத்தில் காதலருடன் தனிமையில் இருந்தபோது, அங்கு வந்த ஞானசேகரன் என்ற நபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, ஒரு சாறுடன் நான் அழைக்கும்போது வந்து உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.

கடந்த வாரம் பேச்சு

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மாணவிக்கு நீதி வேண்டும் என போராட்டம் செய்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர், கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தபோது, யார் அந்த சார் என புலன் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார். 

thirumavalavan

ஆதாயம் தேடுகிறார்கள்

இந்நிலையில், நேற்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வரை சந்தித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "அரசியல் செய்து ஆதாயம் தேட குறியாக இருப்பது ஏற்புடையது அல்லது. இது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிரான நடவடிக்கை. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தங்களின் ஆதாய நோக்கில் கையாளுவது வருத்தம் அளிக்கிறது. 

இதையும் படிங்க: #JustIN: "எமர்ஜன்சியா இது? ஜனநாயகத்துக்கு நல்லதல்ல" - தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சிபிஐ, நீதிமன்றத்திடம் கேளுங்கள்

அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் உடனடியாக குற்றம் சாட்டப்பவர், குண்டரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் புலன் விசாரணையை நடத்துவதற்கு என உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இனி கேள்விகளை எழுப்புவோர், நீதிமன்றம் அல்லது சிறப்பு புலனாய்வு குழு மீது எழுப்பலாம். தமிழ்நாடு அரசு & காவல்துறையின் மீது குற்றசாட்டு முன்வைப்பது, அரசியல் ஆதாயத்திற்கு கட்சிகள் செயல்படுவதை உறுதி செய்துள்ளது" என பேசினார்.
 

இதையும் படிங்க: #Breaking: "ஆளுநர் ரவியே வெளியேறு" - அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பேச்சு.!