மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: மேல்மருவத்தூர்: குற்றவாளியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் பயணம்; உதவி ஆய்வாளர் உட்பட பெண் காவலர்கள் இருவர் பரிதாப பலி.!
இன்று காலை நடந்த சாலை விபத்தில் பெண் காவலர்கள் இருவர் பலியான சோகம் மேல்மருவத்தூர் அருகில் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், சிறுநாகலூர் பகுதியில், இன்று காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ, காவலர் நித்யா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உதவி ஆய்வாளர் நிகழ்விடத்திலேயே பலி
சிறுநாகலூர் பகுதியில் இவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தபோது, பின்னால் அதிவேகத்துடன் வந்த கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென காவல் ஆய்வாளரின் மீது மோதியது. இந்த விபத்தில் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.
இதையும் படிங்க: 19 வயது இளம் திமுக நிர்வாகி மரணம்., அலட்சியமாக வேடிக்கை பார்த்தவாறு வாகனம் ஓட்டியவரால் சோகம்;
காவலர் மருத்துவமனையில் பலி
மேலும், படுக்கையடமடைந்த காவலர் நித்யா பொதுமக்களால் மீட்கப்பட்டு உடனடியக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சில நிமிடங்களில் உயிரிழந்தார். இந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயம் குறித்து மேல்மருவத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஜெயஸ்ரீ சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் குற்றவாளியை பிடிக்கச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: Watch: சாய்ந்து விழுந்த மரம்.. அதிஷ்டவசமாக தப்பித்த தாய்-குழந்தைகள்.. கார் ஓட்டுநர் உடல் நசுங்கி சாவு.!