மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Watch: சாய்ந்து விழுந்த மரம்.. அதிஷ்டவசமாக தப்பித்த தாய்-குழந்தைகள்.. கார் ஓட்டுநர் உடல் நசுங்கி சாவு.!
ஒரு நொடி கூட நிச்சயம் இல்லாத வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள பல பகுதிகளில் இன்று மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பிரதான போக்குவரத்து சேவையும் சில இடங்களில் துண்டிக்கப்படும் நிலைக்கு உள்ளாகியது. போர்க்கால அடிப்படையில் பாதைகளை சீரமைக்கும் பணியில் அதிகாரிகளால் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தண்ணீர் லாரி மோதி தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு; அதிவேகம், தலைக்கவசம் அணியாததால் சோகம்.!
மரம் சாய்ந்து விபத்து
இந்நிலையில், குன்னூரில் உள்ள பிரதான சாலையில், சாலையோரம் இருந்த ராட்சத மரம் ஒன்று தொடர் மழை காரணமாக மண்ணின் வலுவை இழந்து சாய்ந்தது. மரம் நேரடியாக மின்கம்பி மீது விழுந்து, சாலையில் சென்ற காரின் மீது விழுந்தது.
ஒருவர் பலி
இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஜாகிர் உசேன் என்பவர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சாலையை தனது 2 குழந்தைகளுடன் கடந்துகொண்டு இருந்த பெண்மணி, நூலிழையில் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இந்த விசயம் தொடர்பான பரபரப்பு காட்சிகள், அங்கிருந்த கேமிராவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகின்றன. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் & காவல்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் காரில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
#JUSTIN கார் மீது ராட்சத மரம் விழும் பதறவைக்கும் சிசிடிவி காட்சி!
— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 3, 2024
குன்னூரில் நேற்று சாலையில் சென்று கொண்டிருந்த கார்
மீது ராட்சத மரம் விழுந்ததில் ஜாகீர் உசைன் என்பவர் உயிரிழப்பு; நூலிழையில் உயிர் தப்பிய தாய் மற்றம் 2 குழந்தைகள்#Kunoor #Nilgiri #News18Tamilnadu |… pic.twitter.com/7iFMmEYbXc
Video ThanksNews18Tamilnadu
இதையும் படிங்க: "ஏன் இரங்கல் தெரிவிக்கல?" - விஜயை வார்த்தைகளால் வறுத்தெடுத்த தவெக நிர்வாகியின் உறவினர்கள்.!