மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
19 வயது இளம் திமுக நிர்வாகி மரணம்., அலட்சியமாக வேடிக்கை பார்த்தவாறு வாகனம் ஓட்டியவரால் சோகம்;
சாலையோரம் போட்டோ சூட் நடத்தியதை வேடிக்கை பார்த்தவாறு வந்த நபர் ஏற்படுத்திய விபத்தில் சிக்கி திமுக நிர்வாகி பலியான சோகம் நடந்துள்ளளது.
சென்னையில் உள்ள தாம்பரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, திரௌபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் திமுக பிரமுகர் ஆவார். பாலாஜியின் மகன் விக்கி என்ற டெல்லி பாபு (வயது 19). இவர் சேலையூர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் பல்கலை.,யில் கணினி அறிவியல் இரண்டாவது ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் திமுக மாணவரான நிர்வாகியாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: Watch: சாய்ந்து விழுந்த மரம்.. அதிஷ்டவசமாக தப்பித்த தாய்-குழந்தைகள்.. கார் ஓட்டுநர் உடல் நசுங்கி சாவு.!
பைபாஸில் போட்டோசூட்
நேற்று முந்தினம் மாலை நேரத்தில் நண்பர் சக்தி பாலன் என்பவரின் இருசக்கர வாகனத்தை வாங்கிய விக்கி, வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலையில் எருமையூர் பகுதியில், சர்விஸ் சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டுவதுபோல போட்டோ சூட் எடுத்துக்கொண்டு இருந்தார்.
மின்கம்பத்தில் தலை மோதி சோகம்
அச்சமயம், பூந்தமல்லியில் உள்ள முத்துக்குமரன் நகர் பகுதியில் வசித்து வரும் தேஜாஸ் (வயது 18), விக்கியின் போட்டோ சூட்டை வேடிக்கை பார்த்தவாறு வாகனத்தை இயக்கி, இறுதியில் வாகனத்தை விக்கியின் மீது மோதினார். இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட விக்கி, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி தலையில் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே பலியானார்.
வேடிக்கை-அலட்சியம் விபத்துக்கு காரணம்
தகவல் அறிந்து வந்த சோமங்கலம் காவல்துறையினர், விக்கியின் உடலை மீட்டு பர்தா பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரிக்கையில், விக்கி போட்டோ சூட் எடுக்கும்போது ஹெல்மட் அணியாமல் இருந்துள்ளார். இதனை வேடிக்கை பார்த்து வந்த மற்றொரு வாகன ஓட்டி, விக்கியின் மீது மோதியது விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்பது உறுதியானது.
வண்டலூர் வெளிவட்ட சாலையை பொறுத்தமட்டில் தினம் பல இளைஞர்கள் போட்டோ சூட் நடத்தி வந்துள்ளனர். வெளிவட்ட சாலையை பொறுத்தவரையில் பல காவல்நிலைய எல்லைப்பகுதியில் அது இன்பத்தால், காவலர்களும் கண்காணிப்பு பணியில் பெருமளவு ஈடுபடுவதில்லை. இதனால் இளைஞர்கள் சில நேரம் ரேஸ் போன்ற விசயத்திலும் ஈடுபடுகின்றனர்.
இதையும் படிங்க: தண்ணீர் லாரி மோதி தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு; அதிவேகம், தலைக்கவசம் அணியாததால் சோகம்.!