கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம்; இளைஞருக்கு ஜாமின் மறுப்பு.. நீதிமன்றம் உத்தரவு.!



  Chennai Guindy Doctor Stabs Case Court Dismiss Vignesh Bail 

சட்டத்தை யாரும் கையில் எடுப்பதை அனுமதிக்கக்கூடாது என்ற வாதத்தை முன்வைத்து, இளைஞர் விக்னேஷுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள கிண்டி கலைஞர் அரசு நூற்றாண்டு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜி, விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டார். அவரின் தாய் பிரேமாவுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் மருத்துவர் குத்தப்பட்டதாக விக்னேஷ் தெரிவித்து இருந்தார். குற்றச்சம்பவத்திற்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

ஜாமின் கேட்டு விண்ணப்பம்

இந்நிலையில், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விக்னேஷ் தனக்கு ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்த சென்னை மாவட்ட நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி கார்த்திகேயன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: உயிரை பறித்த கள்ள உறவு... 2 பிள்ளைகளின் தாய் கொடூரமாக கொலை.!! காதலன் வெறி செயல்.!!

மனு நிராகரிப்பு

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயாரை கவனிக்க வேண்டும். இதய நோயாளியான விக்னேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். குற்றப்பின்னணி இல்லாதவர், அம்மாவின் மீதான பாசத்தால் இந்த செயலை செய்ததாகவும் விக்னேஷின் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

வழக்கு விசாரணை நிறைவுபெறாத காரணத்தால், அரசுத்தரப்பு வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வழக்கு விசாரணையில் ஏற்படும் தொய்வை கருத்தில் கொண்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு ஜாமின் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் அலட்சியமாக ரிவர்ஸ்; அடிச்சி தூக்கிய லாரி.. 10 பேர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள்.!