#JustIN: இரவு 7 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



 Chennai RMC Says Rain till 7 PM 30 Dec 2024 

திருவாரூர், ராமநாதபுரம், தென்காசி உட்பட 24 மாவட்டங்களில் மிதமான மழை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. குறிப்பாக இன்று இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைகனான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிதமான மழைக்கு வாய்ப்பு

இந்நிலையில், இரவு 7 மணி வரை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: இன்று 6 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

rain

லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கான வாய்ப்புகளும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிவகாசி: நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து சோகம்; தாய்-மகன் பரிதாப பலி.! மழையால் நடந்த சோகம்.!