#Breaking: இன்று 6 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



  Chennai RMC Rain Update Today 

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைய காலதாமதம் ஆகிறது. இதனால் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது. இம்மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை பிறப்பிக்கப்படுகிறது. 

நாளை கனமழை

நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை தொடரும். கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 45 கிமீ வரை வீசலாம். 

இதையும் படிங்க: #Breaking: வேகமாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்திற்கு மழை வாய்ப்பு முந்துகிறது - வானிலை ஆய்வு மையம்.! 

weather report

சென்னையில் கனமழை

சென்னை நகரில் இன்று கனமழையும், நாளை மிககனமழையும், நாளை மறுநாள் கனமழையும் பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் டிச.20 முதல் கனமழை குறையத் தொடங்கும்.

இதையும் படிங்க: #JustIN: என்னது புயல் இன்னும் கரையவே கடக்கவில்லையா?.. தமிழ்நாடு வெதர்மேன் ஷாக் தகவல்..!