திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த 70 வயது கிழவன்; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!
சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் விபச்சார தொழில் நடந்து வருவதாக, வளசரவாக்கம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், ஜெயநகர் இரண்டாவது தெருவில் சர்ச்சைக்குரிய நபர்கள் வந்து செல்வதாக கண்டறிந்து ஆய்வு செய்தனர்.
17 வயது சிறுமி மீட்பு
அப்போது, வீட்டில் 17 வயது மாணவி ஒருவர் இருந்த நிலையில், அவரை அதிகாரிகள் மீட்டனர். மேலும், சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வரும் ராமச்சந்திரன் என்ற 70 வயது முதியவர் சிக்கிய நிலையில், அவர் 17 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருக்க வந்ததாக தெரிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: காதலியின் கண்முன் காதலனை துள்ளத்துடிக்க கொலை செய்த கும்பல்; நெல்லையில் பகீர் சம்பவம்.!
37 வயது பெண்ணின் அதிர்ச்சி செயல்
இதனையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பெண் புரோக்கர் நதியா என்ற 37 வயது பெண்மணி சிறுமியை அனுப்பி வைத்ததாகவும் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நதியாவை கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
விசாரணையில், அவர் ஏழ்மையில் இருக்கும் பெண்கள் மற்றும் பணம் சம்பாதிக்க நினைக்கும் சிறுமிகளிடம் ஆசைவார்த்தை கூறி அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது. இதில் மாணவிகளும் அடங்குவார்கள் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; 57 வயது மதுபோதை ஆசாமி அதிர்ச்சி செயல்.!