திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; 57 வயது மதுபோதை ஆசாமி அதிர்ச்சி செயல்.!
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் 85 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இதே பகுதியில் செல்வராஜ் 57 என்பவர் தனது குடும்பத்துடன் இருக்கிறார். இவர் சலவை தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
மதுபோதையில் பாலியல் தொல்லை
மதுபோதைக்கு அடிமையான செல்வராஜ், அவ்வப்போது மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி தனது வீட்டில் இருந்த நிலையில், அங்கு வந்து செல்வராஜ் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா; பெற்ற தாயின் நெகிழ்ச்சி செயல்.!!
எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி
மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் பதறிப்போன மூதாட்டி சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, காவல்துறையினர் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குற்றவாளி கைது
மேலும், செல்வராஜ் மீது ஏற்கனவே பாலியல் வழக்கு ஒன்றும் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது அவர் மூதாட்டியிடம் தவறாக நடக்கும் முயற்சித்ததன் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா; பெற்ற தாயின் நெகிழ்ச்சி செயல்.!!