மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியின் கண்முன் காதலனை துள்ளத்துடிக்க கொலை செய்த கும்பல்; நெல்லையில் பகீர் சம்பவம்.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியைச் சார்ந்தவர் தீபக் ராஜா. இவர் சம்பவத்தன்று அங்குள்ள கேடிசி நகரில் இருக்கும் தனியார் ஓட்டல் முன்பு பெண் ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
காதலியின் கண்முன் கொலை
அச்சமயம் அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. தகவல் அறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்த பின், தீபக் ராஜாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தாயின் ஆண் நண்பர் தலையில் கல்லைப்போட்டு கொலை; சொல்லச்சொல்ல கேட்காததால் விபரீதம்.!
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, தீபக் ராஜா தீபக் ராஜா தனது காதலியுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவரது கண் முன்னே இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளது உறுதியாகியுள்ளது.
திருமணத்திற்கு முன் பறிபோன உயிர்
இருவரும் வரும் ஜூன் மாதம் இரண்டாம் தேதி திருமணம் செய்ய விருந்த நிலையில், தற்போது சந்தித்து பேசிக்கொண்ட போது கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த அதிர்ச்சிகர சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் அதே வேளையில், கொலை சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: செல்போனால் நேர்ந்த கொடூரம்.! தம்பினு கூட பார்க்காமல் அண்ணனின் வெறிசெயல்!!