கணவரின் செயினுக்கு மாமியார்-மருமகள் சண்டை; 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.!



  Chennai Velachery 30 Year Old girl Dies by Suicide 

ஒரு செயினுக்காக மாமியார் - மருமகள் வாக்குவாதம் செய்துகொண்ட நிலையில், மருமகள் விரக்தியில் தற்கொலை செய்த துயரம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள வேளச்சேரி, ஓரண்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் காமாட்சி (வயது 30). இவின் முதல் கணவர் கோபி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்ற சாலை விபத்தில், கோபி உயிரிழந்தார். 

இதனால் தனியாக வசித்து வந்த காமாட்சி, கடந்த மே மாதம் 15ம் தேதி, பெற்றோர் சம்மதத்துடன் மணிகண்டன் என்பவரை கரம்பிடித்து இருக்கிறார். தற்போது காமாட்சி ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறார். நேற்று மணிகண்டன் ஆட்டோ சவாரிக்கு சென்றுவிட, வீட்டில் தனியே இருந்துள்ளார்.

இதையும் படிங்க: தனிகுடித்தனத்திற்கு ஆசைப்பட்டு, புகுந்த வீட்டிற்கு எமனான மருமகள்.. பாச பந்தத்தால் பறிபோன 3 உயிர்கள்.! 

செல்போனில் அழைத்தும் பலனில்லை

அச்சமயம், காமாட்சியின் தாய் மீரா செல்போனில் பலமுறை அழைத்தும் பலனில்லை. இதனால் மருமகனை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார். பதறியபடி மணிகண்டன் வீட்டிற்கு வந்தபோது, வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. 

suicide

தூக்கிட்டு தற்கொலை

இதனால் அதிர்ந்துபோனவர், கதவை உடைத்து உள்ளே சென்றபோது மின்விசிறியில் காமாட்சி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது.

செயினுக்காக நடந்த சண்டை

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், காமாட்சி - மாமியார் பொம்மி இடையே மணிகண்டனின் செயினை அணிவது யார் என்ற விவாதம் நடந்துள்ளது. இதனால் இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர்.

வாக்குவாதத்தில் விரக்தியடைந்த காமாட்சி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: மருத்துவ செலவுக்கு பரிதவித்து, காதல் மனைவி கழுத்தை நெரித்துக்கொலை; கணவனும் தற்கொலை.!