பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
மருத்துவ செலவுக்கு பரிதவித்து, காதல் மனைவி கழுத்தை நெரித்துக்கொலை; கணவனும் தற்கொலை.!
மனநலம், உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியின் மருத்துவ செலவு அதிகரித்ததால், குடும்பத்தை நடத்த இயலாமல் திணறிய கணவர், இறுதியில் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.
காதல் திருமணம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம், பிள்ளைச்சாவடி, கெங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 49). இவரின் மனைவி அபி (வயது 54). தம்பதிகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும், காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓரினசேர்க்கையில் 10 வயது சிறுவன் கொடூர கொலை; கோவில்பட்டி துயரத்தில் பரபரப்பு தகவல் அம்பலம்.!
குழந்தை இல்லை
தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. குழந்தை வேண்டி சென்னை உட்பட பல இடங்களுக்கு சென்றும் சிகிச்சை பெற்றாலும் பலன் இல்லை. சென்னையை பூர்வீகமாக கொண்ட தம்பதி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனின் அண்ணன் கோபாலுடன் கோட்டகுப்பத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மருத்துவ செலவுகள்
பின் ஒருகட்டத்தில் மணிகண்டன் - அபி தம்பதி தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். மணிகண்டன் கிடைக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளார். அபிக்கு குழந்தைப்பேறு சிகிச்சை, சர்க்கரை வியாதி மருத்துவ செலவுகள் இருந்துள்ளது. இதனால் குடும்பத்தை நடத்த இயலாமல் தம்பதிகள் திணறியுள்ளனர்.
மனைவி கொலை
சமீபத்தில் அபி மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால், அதற்காகவும் சிகிச்சை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மனரீதியாக குழப்பமடைந்த மணிகண்டன், நேற்று முந்தினம் மனைவி அபியின் கழுத்தை தேங்காய் நார் கயிறு கொண்டு இறுக்கி கொலை செய்துள்ளார்.
கணவர் தற்கொலை
பின் வீட்டின் உத்திரத்தில் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலை தம்பதியின் வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் வீட்டிற்கு வந்த கோபால், கதவை உடைத்து பார்த்தபோது தம்பதிகளின் சடலம் கிடந்தது.
காவல்துறை விசாரணை
இதுகுறித்து கோட்டக்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருமகளின் உல்லாச லீலைகள்.. மாமியார் செய்த செயல்.. பின் நடந்தேறிய விபரீதம்.!