#BREAKING : தேவா பற்றி கேட்ட செய்தியாளர்.. இளையராஜா டென்ஷனாகி சொன்ன வார்த்தை.!
கஞ்சா வழக்கில் கைதான மகன்; காவல் நிலையம் முன் தீக்குளித்த தந்தை.. கோவையில் பரபரப்பு.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம், அன்னை இந்திரா நகர் பொதுக்கழிப்பட பகுதியில் இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 2 பேரை கையும்-களவுமாக பிடித்தனர்.
கஞ்சா விற்பனை வழக்கில் கைது
அவர்கள் இருவரிடம் இருந்து 107 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், இருவரும் மணி பாரதி, ஜானகி ராமன் என்பது தெரியவந்தது. இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்கட்சி பிரமுகர்.. புகாரை வாபஸ் பெற மிரட்டும் வடவள்ளி இன்ஸ்பெக்டர்.. பெண் குமுறல்.!
பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்
இதனிடையே, இன்று காலை கவுண்டம்பாளையம் காவல் நிலையம் வந்த சிவா நகர் பகுதியில் வசித்து வந்த சேகர் என்பவர், தனது மகன் மணி பாரதியின் மீது பொய்யான கஞ்சா வழக்கு பதியப்பட்டு, அவரை அதிகாரிகள் கைது செய்துவிட்டனர் என உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
காவல்துறை விசாரணை
இதனை சற்றும் எதிர்பாராத நிலையில், காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும், அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டார். விசாரணையில், அவர் கஞ்சா விற்பனை வழக்கில் கைதான இளைஞர் மணி பாரதியின் தந்தை என்பது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வரும் சேகர், பாரத சேனா அமைப்பின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் ஷாக்.. 3000 பேரின் வேலை ஒரே நொடியில் காலி.. அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி செயல்.!