#BREAKING : தேவா பற்றி கேட்ட செய்தியாளர்.. இளையராஜா டென்ஷனாகி சொன்ன வார்த்தை.!
பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்கட்சி பிரமுகர்.. புகாரை வாபஸ் பெற மிரட்டும் வடவள்ளி இன்ஸ்பெக்டர்.. பெண் குமுறல்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் வசித்து வருபவர் கமலா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக, திமுக 40 வது வட்ட செயலாளர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இதனிடையே, சமீபகாலமாக திமுக பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பல இடங்களில் புகார்
கடந்த 2 ஆண்டுகளாக பெண் பாலியல் தொல்லையை தொடர்ந்து வந்த நிலையில், ஒருகட்டத்திற்கு மேல் எனது அரசியல் நண்பர்களுடன் நீ தனிமையில் இருக்க வேண்டும் என மிரட்டி இருக்கிறார். இதனால் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சரக டிஐஜி என அலுவலகம் அலைந்து புகார் அளிக்கப்பட்டது.
பெண்ணுக்கு மிரட்டல்
புகார் விசாரணை வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் வசம் வரும்போது, அவர் திமுக பிரமுகருக்கு ஆதராக செயல்பட்டு, புகாரை வாபஸ் பெற மிரட்டல் கொடுத்துள்ளார். கடந்த 4 மாதமாக எந்த விதமான முன்னேற்றமும் வழக்கில் ஏற்படவில்லை. தற்போது பெண்ணை ஊரில் இருந்து வெளியூர் செல்ல மிரட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் ஷாக்.. 3000 பேரின் வேலை ஒரே நொடியில் காலி.. அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி செயல்.!
இதனால் பெண்மணி தனது உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மீண்டும் தற்போது மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக பெண்மணி செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: மறைந்தாலும், ஐவரின் உடலில் வாழும் கோவை தலைமை ஆசிரியர்.. நெகிழ்ச்சி செயல்.!