மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருச்சியில் சோகம்... கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்.!! மாணவன் பலி.!!
திருச்சி அருகே நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பனுடன் பைக்கில் பயணம்
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் பக்ருதீன். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லாஹ் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் நண்பர்கள் இருவரும், இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுரையில் தங்கள் வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு ஊருக்கு திரும்பி இருக்கின்றனர்.
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து
பக்ருதீன் மற்றும் அவரது நண்பர் ஷேக் அப்துல்லாஹ் ஆகியோர் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவரங்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்தபோது இவர்கள் வந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது இரு சக்கர வாகனத்துடன் மோதியது. இந்த விபத்தில் பக்ருதீன், ஷேக் அப்துல்லாஹ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதையும் படிங்க: கோபியில் அதிர்ச்சி... 15 வயது சிறுமி கர்ப்பம்.!! 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது.!!
பரிதாபமாக பலியான கல்லூரி மாணவன்
இதனைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறை உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவன் பக்ருதீன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறை அனுப்பி வைத்தது. மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த ஷேக் அப்துல்லாஹ் மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: "உடம்பெல்லாம் எரியுது காப்பாத்துங்க.." கட்டி அனைத்தபடி கதறிய பெண்.!! கணவன் வெறி செயல்.!!