ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
இருசக்கர வாகனம் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. கணவன் - மனைவி பரிதாப பலி.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமத்தில் வசித்து வருபவர் இளவரசி. இவர் சிதம்பரம், குமராட்சி காவல் நிலையத்தில், காவல் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இளவரசியின் கணவர் கலைவேந்தன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
இந்நிலையில், தம்பதிகள் இருவரும் சிதம்பரம், வீரன்கோவில்திட்டு கிராமத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்களின் வாகனம் சிதலப்பாடி பகுதியில் சென்றபோது, எதிர்திசையில் கொடியம்பாளையம் கிராமத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி பேருந்து வந்தது.
இதையும் படிங்க: தமிழக வாழ்வுரிமை கட்சிப் பிரமுகர் குத்திக்கொலை; கடலூரில் பரபரப்பு.. வீட்டு முன்பு சுற்றிவளைத்து பயங்கரம்.!
நேருக்கு நேர் மோதி விபத்து
இந்த இரண்டு வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்துடன் இழுத்துச்செல்லப்பட்ட தம்பதி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிலமணிநேர போராட்டத்திற்கு பின்னர், பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்த தம்பதியின் உடலை மீட்டனர்.
உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: திருமணமான 8 மாதத்தில், கர்ப்பிணி மனைவியை பரிதவிக்கவைத்து மரணம்; ஆசையை நிறைவேற்ற முயன்று துயரம்.!