தமிழக வாழ்வுரிமை கட்சிப் பிரமுகர் குத்திக்கொலை; கடலூரில் பரபரப்பு.. வீட்டு முன்பு சுற்றிவளைத்து பயங்கரம்.!



  in Cuddalore Velmurugan's TVK Party Supporter Kills 

வீட்டின் முன்பு நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்த கட்டிட தொழிலாளி கொல்லப்பட்டார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்துநகர், சான்றோம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (வயது 32). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மேலும், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

கத்தியால் குத்திக்கொலை

இதனிடையே, நேற்று தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் சங்கர் பேசிக்கொண்டு இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சங்கரை சுற்றிவளைத்து சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: #Breaking: தவெக முக்கியப்புள்ளி புஸ்ஸி கைது; சென்னையில் பரபரப்பு..!

காவல்துறை விசாரணை

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சங்கருக்கும் - அதே பகுதியில் வசித்து வரும் சதீஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. இந்த முன்விரோதத்தில், சங்கரை சதீஷ் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். 

வீடு சூறையாடல்

இந்த விவகாரத்தை அறிந்த காவல்துறையினர் சதீஷ், அவரின் நண்பருக்கு வலைவீசி இருக்கின்றனர். மேலும், சங்கர் கொல்லப்பட்ட ஆத்திரத்தில், இன்று அதிகாலை சதீஷின் வீட்டிற்கு சென்ற சங்கரின் உறவினர்கள், சதீஷின் வீட்டை சூறையாடினர். வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை தீவைத்து கொளுத்தினர். 

தொடர்ந்து பதற்ற சூழல் அப்பகுதியில் நிலவி வருவதால், காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திருமணமான 8 மாதத்தில், கர்ப்பிணி மனைவியை பரிதவிக்கவைத்து மரணம்; ஆசையை நிறைவேற்ற முயன்று துயரம்.!