வாடகை கேட்ட உரிமையாளருக்கு ஆபாச அர்ச்சனை.. திருநங்கையை கட்டளையால் அடித்துக்கொன்ற பயங்கரம்.!



Cuddalore Vridhachalam Transgender Killed 

 

வாடகை கேட்டு நடந்த தகராறில், திருநங்கை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சங்கவி என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இவரின் வீட்டு உரிமையாளர் ஷரீப். 

இதையும் படிங்க: மாணவிக்கு பாலியல் தொல்லை; லேப் அசிஸ்டன்ட் கைது.! சஸ்பெண்ட் செய்து உத்தரவு.!

வாடகை வீட்டில் வசித்து வந்த சங்கவி, சரிவர வாடகை பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் வாடகை பணத்தை ஷரீப் கேட்டபோது, அவரை தரக்குறைவாக பேசி திருநங்கை சங்கவி அட்டகாசம் செய்துள்ளார். 

இதனால் வீட்டின் உரிமையாளர் ஷரீப், விருத்தாச்சலம் மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவி அலுவலகத்தில் நேரில் சென்று இவ்விசயம் குறித்து புகார் அளித்துள்ளார். 

Cuddalore

வாக்குவாதம் முற்றி கொலை

இந்த புகாரின் பேரில், திருநங்கை சங்கவியை நேரில் சென்று திருநங்கைகள் குழு கண்டித்துள்ளது. அப்போது, இருதரப்பு வாக்குவாதம் உண்டாகியது.

இந்த வாக்குவாதத்தில் திருநங்கைகள் குழு சங்கவியை தாக்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரின் உடலை காப்புக்காட்டில் வீசி இருக்கின்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சங்கவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உடல் மீட்கப்பட்டது கருவேப்பிலங்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட காப்புக்காடு என்பதால், கருவேப்பிலங்குறிச்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் 3 திருநங்கைகள் என 6 பேர் கைது செய்யட்டுள்ளனர்.


 

இதையும் படிங்க: 5 வயது சிறுமியின் உயிருக்கு எமனான தனியார் பேருந்து; தந்தையுடன் பயணித்தபோது சோகம்.!