5 வயது சிறுமியின் உயிருக்கு எமனான தனியார் பேருந்து; தந்தையுடன் பயணித்தபோது சோகம்.!



in Cuddalore Bhuvanagiri tRactor Private Bus Accident 

 

பேருந்து - டிராக்டர் மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் காயமடைந்தனர், சிறுமி பலியாகினர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பள்ளித்தெருவில் வசித்து வருபவர் ஜெகதீஷ். இவர் விவசாயி ஆவார். இவருக்கு திருமணம் முய்ட்னது மனைவி, 5 வயதுடைய கவிநிஷா என்ற மகள் இருக்கிறார். 

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் - அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து; பள்ளி மாணவர், மாணவி பரிதாப பலி.!

இதே பகுதியில் வசித்து வரும் நபரின் டிராக்டரில், விறகு ஏற்றுக்கொண்ட ஜெகதீஷ் சிதம்பரம் நோக்கி பயணம் செய்தார். டிராக்டரில் ஜெகதீஸுடன், அவரின் மகளும் பயணித்துள்ளார். 

Cuddalore

தனியார் பேருந்து - டிராக்டர் மோதி சோகம்

சுமார் இரவு 8 மணிக்கு மேல் இவர்களின் வாகனம் கீரப்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் பகுதியில் சென்றபோது, சிதம்பரம் நோக்கி பயணம் செய்த தனியார் பேருந்து, டிராக்டர் மீது மோதியது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். ஜெகதீஷின் மகள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

இந்த விஷயம் குறித்து புவனகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: கடலூர்: வெடிக்காத பட்டாசு மருந்தை கொளுத்தி விளையாட்டு; 4 ம் வகுப்பு சிறுவனின் முகம் கருகி சோகம்.!