சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
மாணவிக்கு பாலியல் தொல்லை; லேப் அசிஸ்டன்ட் கைது.! சஸ்பெண்ட் செய்து உத்தரவு.!
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆய்வக உதவியாளர் பணியிடையிக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆய்வக உதவியாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
பாலியல் தொல்லை
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சி.முட்லூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் வேதியியல் துறையில், ஆய்வக உதவியாளராக சிதம்பரநாதன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: 5 வயது சிறுமியின் உயிருக்கு எமனான தனியார் பேருந்து; தந்தையுடன் பயணித்தபோது சோகம்.!
இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கவே, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர், சிதம்பரநாதனை (வயது 34) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பணியிடைநீக்கம்
மேலும், அவரை சென்னை கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவள்ளி, பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் - அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து; பள்ளி மாணவர், மாணவி பரிதாப பலி.!