திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பதற வைக்கும் தகவல்... இறந்த தாய் உடலுடன் பூஜை செய்த மகன்.!! இறுதியில் எடுத்த விபரீத முடிவு.!!
பெரம்பலூர் மாவட்டத்தில் தாயின் இறந்த உடலுக்கு பூஜை செய்த மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இறந்த உடல்களை கைப்பற்றிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகைப்படக் கலைஞர்
பெரம்பலூர் மாவட்டம் ரோவர் ஆர்ச் சாலை முத்துநகர் பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் காரைக்குடியைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான ஸ்ரீராம் தனது தாயுடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் வாழ்ந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
தாய் உயிர்த்தெழ பூஜை செய்த ஸ்ரீராம்
இது தொடர்பாக காவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி இருக்கிறது. ஸ்ரீராம் வீட்டில் கைப்பற்றப்பட்ட 70 வயது மூதாட்டியின் சடலத்தின் மீது மஞ்சள் குங்குமம் எலுமிச்சம் பழம் போன்ற பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் இறந்த தாய் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் என ஸ்ரீராம் பூஜை செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரது தாய் மீண்டும் உயிருடன் வராததால் ஸ்ரீராமும் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பகீர் சம்பவம்... "அவ எங்க இருக்கான்னு சொல்லு உயிரோட விட்டர்றேன்.." கள்ள காதலுக்காக தொழிலதிபர் கொலை.!!
காவல்துறை விசாரணை
இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 2 உடல்களையும் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் கடந்த சில தினங்களாக ஸ்ரீராம் கடன் பிரச்சனையில் இருந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: மதுரை அருகே பயங்கரம்... துள்ளத் துடிக்க கொலை செய்யப்பட்ட இரட்டையர்கள்.!!