திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருப்பூரில் பயங்கரம்... சிறுமியை ஆபாச வீடியோ எடுத்த காதலன்.!! நண்பனின் மூலம் ஸ்கெட்ச் போட்ட தந்தை.!!
திருப்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருந்து அதனை வீடியோ எடுத்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை மற்றும் மற்றொரு நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
14 வயது சிறுமியுடன் காதல்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் திருப்பூரில் உள்ள கனகம்பாளையம் என்ற இடத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் புவனேஸ்வரனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இவர் தனது 14 வயது காதலியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தனிமையில் உல்லாசமாக இருந்திருக்கிறார். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.
பணம் கேட்டு மிரட்டிய நண்பன்
புவனேஸ்வரன் அனுப்பிய வீடியோக்களை பயன்படுத்தி அவரது நண்பரான தமிழரசன் என்பவர் சிறுமியின் தந்தையை தொடர்பு கொண்டு 15,000 ரூபாய் கேட்டு மிரட்டி இருக்கிறார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து சமரசம் பேசினர். மேலும் பணம் கேட்டு மிரட்டிய தமிழரசனை எச்சரித்து அனுப்பினார்.
இதையும் படிங்க: பதற வைக்கும் தகவல்... இறந்த தாய் உடலுடன் பூஜை செய்த மகன்.!! இறுதியில் எடுத்த விபரீத முடிவு.!!
கொலை செய்யத் திட்டம்
இந்நிலையில் புவனேஸ்வரன் சிறுமியுடன் காதலைத் தொடர்ந்து இருக்கிறார். மேலும் சிறுமியை அடிக்கடி அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை புவனேஸ்வரனின் நண்பன் தமிழரசனை அழைத்து அதிக பணம் தருவதாக கூறி புவனேஸ்வரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இவர்களது திட்டத்தின் படி தமிழரசன், புவனேஸ்வரனை மது அருந்துவதாக கூறி அழைத்து சென்று கூலிப்படையை ஏவி வெட்டி கொலை செய்தார்.
காவல்துறை விசாரணை
இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த புவனேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய தமிழரசன் மற்றும் சிறுமியின் தந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பகீர் சம்பவம்... "அவ எங்க இருக்கான்னு சொல்லு உயிரோட விட்டர்றேன்.." கள்ள காதலுக்காக தொழிலதிபர் கொலை.!!