மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உசுரு போச்சே... மகன் திட்டியதால் ஆத்திரம்.!! போதை நபர் எடுத்த விபரீத முடிவு.!!
தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருவெறும்பூர் காவல்துறை அதிகாரிகள் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது பழக்கத்திற்கு அடிமையான நபர்
திருச்சி நகரின் திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. மேலும் தினமும் மது குடித்துவிட்டு வந்து குடும்பத்தினரிடமும் அக்கம் பக்கத்தில் இருக்கும் நபர்களிடமும் தகராறு செய்து வந்திருக்கிறார்.
மகன் திட்டியதால் துயர முடிவு
இந்நிலையில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வழக்கம் போல் மது குடித்துவிட்டு வந்த ஆம்ஸ்ட்ராங் தனது குடும்பத்தாரிடம் போதையில் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மகன் அவரை கடுமையாக திட்டி இருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆம்ஸ்ட்ராங் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: "நம்மள சேர்ந்து வாழ விட மாட்டாங்க.." கள்ளக்காதலுக்கு பலியான கணவன்.!! 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது
காவல்துறை விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் திட்டியதால் போதை ஆசாமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: தீபாவளி தினத்தில் கொடூரம்.!! வெட்டி சாய்க்கப்பட்ட அண்ணன், அண்ணி.!! உடன்பிறப்பு வெறி செயல்.!!