மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளி தினத்தில் கொடூரம்.!! வெட்டி சாய்க்கப்பட்ட அண்ணன், அண்ணி.!! உடன்பிறப்பு வெறி செயல்.!!
தீபாவளி தினத்தன்று சொந்தத் தம்பியே தனது அண்ணன் மற்றும் அண்ணியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மேட்டூர் காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் நபர் மற்றும் அவரது மனைவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குடும்பத் தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். இவரது தம்பி முருகன். முருகனுக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாரிமுத்து மற்றும் முருகன் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்திருக்கிறது.
அண்ணன், அண்ணி வெட்டி படுகொலை
நேற்று தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மாரிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த முருகன் தனது அண்ணன் மற்றும் அண்ணியிடம் தகராறு செய்ததோடு மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்களை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார். இதனைத் தொடர்ந்து முருகன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனி ஆகியோர் தலைமறைவாகினர்.
இதையும் படிங்க: நாடக காதல்... 17 வயது சிறுமி கற்பழிப்பு.!! ஆட்டோ ஓட்டுநர் கைது.!!
காவல்துறை தேடுதல் வேட்டை
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்து மாரிமுத்து மற்றும் அவரது மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தப்பியோடிய முருகன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சினியை தீவிரமாக தேடி வருகின்றனர். தீபாவளி தினத்தன்று நடைபெற்ற கொலை சம்பவம் மேட்டூர் பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: நாட்டு பட்டாசு வெடித்து சோகம்; 22 வயது இளைஞர் பரிதாப பலி.. தீபாவளியன்று துயரம்.!