மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நம்மள சேர்ந்து வாழ விட மாட்டாங்க.." கள்ளக்காதலுக்கு பலியான கணவன்.!! 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது
மதுரை அலங்காநல்லூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதல்
மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(30). இவர லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜோதிகா(23). இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலங்காநல்லூர் பகுதியில் பேவர் பிளாக் வேலை செய்வதற்காக உடப்பன்(22) என்ற நபர் வந்திருக்கிறார். அப்போது அவருக்கும் சரவணனின் மனைவி ஜோதிகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.
மீண்டும் கணவருடன் சேர்த்து வைப்பு
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சரவணனின் மனைவி ஜோதிகா தனது கள்ளக்காதலன் உடப்பனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் கடந்த வாரம் சரவணன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஜோதிகாவை சரவணனுடன் வாழ வைத்தனர். இது கள்ளக்காதல் ஜோடிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தங்களது காதலுக்கு இடையூறாக இருக்கும் சரவணனை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: தீபாவளி தினத்தில் கொடூரம்.!! வெட்டி சாய்க்கப்பட்ட அண்ணன், அண்ணி.!! உடன்பிறப்பு வெறி செயல்.!!
திட்டம் தீட்டி படுகொலை
இதனைத் தொடர்ந்து தங்களது திட்டத்தின் படி வீட்டில் மது போதையில் படுத்துதிருந்த சரவணனை அவரது மனைவி ஜோதிகா மற்றும் கள்ளக்காதலன் உடப்பன் ஆகியோர் கொடூரமாக கழுத்தறுத்து படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவத்திற்கு உடப்பனின் நண்பனான 17 வயது சிறுவனும் உடந்தையாக இருந்திருக்கிறான். சரவணன் இறந்ததும் அவரது உடலை அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் கூட்டமாக இருந்ததால் வீட்டருகே வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறை விசாரணை செய்ததில் கொடூர கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஜோதிகா, உடப்பன் மற்றும் உதவியாக இருந்த 17 வயது சிறுவன் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.
இதையும் படிங்க: நாடக காதல்... 17 வயது சிறுமி கற்பழிப்பு.!! ஆட்டோ ஓட்டுநர் கைது.!!