தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
செல்போன் சிக்னல், மின்சாரம் இல்லை . கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் கடும் பாதிப்பு.!
ஃபெஞ்சல் புயலின் தீவிர மழை காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் மழை-வெள்ளத்தினை எதிர்கொண்டுள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் உள்ள கிராமங்கள், முக்கிய சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணையில் இருந்து அதிகபட்ச வெள்ளநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று நீரின் அளவு குறைத்துக்கொள்ளப்பட்டது. எனினும், கர்நாடக பகுதிகளில் மழை தொடருவதால் தென்பெண்ணையாறு, காவேரி ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கடும் வெள்ள சேதம்
இந்நிலையில், பல இடங்களில் மின்விநியோகம் தடைபட்டு இருக்கின்றன. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளம் புகுந்த இடங்களில் செல்போன் கோபுரங்கள் மின் இணைப்பை இழந்துள்ளன.
இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இடங்களில் சிக்னல் சரிவர கிடைக்கவில்லை. மின்சார விநியோகம் இல்லாமல் செல்போன் டவரும் இயங்காத நிலையில், டவர் அமைப்புகளும் வெள்ளத்தினால் பாதிப்பை சந்தித்துள்ளளதாக கூறப்படுகிறது.
கஜா புயல் நினைவிருக்கா?
முன்னதாக கஜா புயலின் போது டெல்டா மாவட்டங்களில் மின்சாரம், செல்போன் டவர் பிரச்சனை ஏற்பட்டு இருந்த நிலையில், தற்போது அவை மீண்டும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை பாதித்துள்ளது.
ஒருசில நாட்களுக்குள் முற்றிலும் மின் விநியோகத்தை வழங்கும்பொருட்டு, தென்மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் மின்சார பணியாளர்கள் வரவழைக்கப்ட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் அரசூர் உட்பட ஒருசில இடங்களில் மக்கள் நிவாரணப்பொருட்கள், உணவுகள் கேட்டு போராட்டமும் நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: திருவண்ணாமலையில் வீட்டில் மண்சரிந்த விவகாரம்; 3 பேரின் உடல்கள் மீட்பு.. உறவினர்கள் கதறல்.!