மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்பொழுது? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடந்து இருக்க வேண்டும். இந்தநிலையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது வளர்ச்சிப் பணிகளுக்கு தடையாக இருப்பதாகவும், எனவே விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆணை வெளியிட தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு, மாநில தேர்தல் ஆணையம் அக்டோபர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க கூடுதலாக 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை இந்த ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதிக் குள் வெளியிடவேண்டும் என்றும், அது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.