மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீட் தேர்வில் தோல்வி எதிரொலி!,,.. தேர்வு முடிவுகளுக்கு பின்னர் முதல் பலி!,, 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில வருடங்களாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடந்து வருகிறது. இதற்கிடையே நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் கலந்து கொண்டு தேர்வை எழுதினர்.
இந்த நிலையில், நீட் தேர்வு முடிவு நேற்று இரவு 11 மணிக்கு மேல் வெளியானது. அதன்படி, இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் 56.3 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதியதில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், திருவள்ளூர், அம்பத்தூர், சோழபுரம் பகுதியை சேர்ந்த லக்சனா ஸ்வேதா (19) என்ற மாணவி நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அந்த மாணவி தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இந்த நிலையில், தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.