மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாமியார் - மருமகள் ஊட்டிவிட்டு சாப்பிட்டால் உணவு இலவசம்.. எங்கு தெரியுமா!
மாமியார்-மருமகள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு சாப்பிட்டால் அவர்கள் சாப்பிடும் உணவு இலவச என உணவக உரிமையாளர் ஒருவர் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் நாளை (மார்ச் 8ம் தேதி) மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இது போன்ற மகளிர் தினங்களில் மகளிருக்கு பல்வேறு வகையான சலுகைகள் மற்றும் வித்தியாசமான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வித்தியாசமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, உணவகத்திற்கு வரும் மாமியார்-மருமகள்கள் ஒருவருக்கொருவர் சாப்பாட்டை கூட்டிக்கொண்டு சாப்பிட்டால் அவர்கள் சாப்பிடும் உணவு இலவச என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பேசிய உணவக உரிமையாளர், இந்த அறிவிப்புக்கு ஈரோடு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நிறைய மாமியார் மற்றும் மருமகள்கள் எங்கள் உணவகத்திற்கு வந்து ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு மகிழ்ச்சியாக சாப்பிடுகின்றனர்.
மேலும், மகளிர் தினத்தில் மாமியார் மற்றும் மருமகள்கள் ஒற்றுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த முறையை நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்தத் திட்டத்திற்கு பெண்களிடம் இருந்து ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.