வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான சங்கரய்யா காலமானார்... தலைவர்கள் இரங்கல்!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான சங்கரய்யா உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.
தமிழகத்தில் 3 முறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றியுள்ளார் . சங்கரய்யாவுக்கு தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்நிலையில் சங்கரய்யாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை திடீரென 9.30 மணியளவில் காலமானார். இவரின் இறுதி சடங்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. சங்கரய்யாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.