சென்னை: ஏடிஎம்-ல் பணம் எடுக்கச்சென்ற இளைஞர் பலி.. பதறிய பொதுமக்கள்..!



in-chennai-broadway-youth-dies-by-electrocution-electri

பெஞ்சல் புயலின் வெள்ள நீர் காரணமாக, இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பெஞ்சல் புயல் தாக்கத்தால் இன்று அதிகாலை 4 மணிமுதல் கனமழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது..

சென்னையில் உள்ள முத்தியால்பேட்டை, மலையப்பன் தெரு பகுதியில் வசித்து வருபவர் சந்தன் (வயது 20). இவர் வடமாநில தொழிலாளர் ஆவார். தற்போது மேற்கூறிய பகுதியில் தங்கியிருந்தவாறு பணியாற்றி வருகிறார். 

இதையும் படிங்க: திண்டுக்கல்: கட்டிங் மெஷின் பிளேடு பாய்ந்து கழுத்து அறுபட்டு பறிபோன உயிர்.. ரீவைண்டிங் கடையில் சோகம்.!

இன்று, பிராட்வே பகுதியில் உள்ள பிரகாசம் சாலையில் இருக்கும் ஐசிஐசிஐ ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, ஏடிஎம் முன்பு இருந்த கம்பியை பிடித்து மேலே ஏற முற்பட்டார். 

இளைஞர் பலியான காட்சி

மின்சாரம் பாய்ந்து சோகம்

அச்சமயம், மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால், சந்தன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரின் உடல் அங்கேயே சுமார் 20 நிமிடம் வரை மிதந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் சென்று உடலை மீட்டனர். 

சந்தனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. தகவல் அறிந்து வந்த முத்தியால்பேட்டை காவல்துறையினர், சந்தனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட காணொளி

இதையும் படிங்க: உணவு கொடுக்க வந்த பாகன் உட்பட 2 பேர் பலி., திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை அதிர்ச்சி செயல்.!