மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உணவு கொடுக்க வந்த பாகன் உட்பட 2 பேர் பலி., திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை அதிர்ச்சி செயல்.!
கோவில் யானை பாகன் மற்றும் அவரின் உதவியாளரை மிதித்துக்கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து செல்வார்கள். தற்போது கார்த்திகை மாதமும் தொடங்கியுள்ள நிலையில், முருக பக்தர்களின் கூட்டம் திருச்செந்தூரில் அலைமோதி வருகிறது.
இதையும் படிங்க: பெண்களே கவனம்.! அகல்விளக்கு தீ சேலையில் பரவி பரிதாபம்; தொழிலதிபரின் மனைவி போராடி பலி.!
தெய்வானை யானை
குறிப்பாக வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் கார்த்திகை மாதத்தின் முக்கிய நாட்களில் முருகனை நேரில் வந்து பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்து செல்கின்றனர். இதனிடையே, முருகன் கோவிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. யானை தெய்வானை கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இருவர் பலி
தெய்வானையை பாகன் உதயன், உறவினர் சிசுபாலன் ஆகியோர் கவனித்து வந்தனர். இந்நிலையில், இன்று யானைக்கு பழங்கள் கொடுக்கச் சென்றதாக தெரியவருகிறது. அப்போது, திடீரென ஆக்ரோஷமான தெய்வானை இருவரையும் மிதித்ததில், அவர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தெய்வானைக்கு மதம் பிடிக்காத நிலையில், திடீரென மாறிய குணம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. துதிக்கையால் பாகனை பிடித்து இழுத்து, பின் காலில் போட்டு மிதித்து தெய்வானை பாகனை கொன்றுள்ளது.
இதையும் படிங்க: பர்வத மலைப் பயணத்தில் சோகம்; கள்ளக்குறிச்சி நபர் மாரடைப்பால் மரணம்.!