திண்டுக்கல்: கட்டிங் மெஷின் பிளேடு பாய்ந்து கழுத்து அறுபட்டு பறிபோன உயிர்.. ரீவைண்டிங் கடையில் சோகம்.!



in Dindigul Rewinding Shop Accident one died 

கட்டிங் மெஷின் பிளேடு உடைந்து, ரீவைண்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் பலியான சோகம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நங்கல் நகர் பகுதியில் வசித்து வருபவர் காசிலிங்கம். இவர் அப்பகுதியில், சகாயமாலா ரீவைண்டிங் ஒர்க் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அங்கு காசிலிங்கத்துடன் இளைஞர் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். 

கட்டிங் மெஷின் பிளேடு

இன்று காலை அவர் வழக்கம்போல் கடைக்கு சென்று, பணிகளை கவனித்துள்ளார். அப்போது, பழுது நீக்கம் செய்ய வந்த மெஷின் ஒன்றை கட்டிங் மெஷின் கொண்டு வெட்டியதாக தெரியவருகிறது.

இதையும் படிங்க: உணவு கொடுக்க வந்த பாகன் உட்பட 2 பேர் பலி., திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை அதிர்ச்சி செயல்.!

காவல்துறையினர் விசாரணை

அச்சமயம், கட்டிங் மெஷினின் இரும்பு பிளேடு உடைந்து, அது காசிலிங்கத்தின் நெஞ்சு, கழுத்தை அறுத்துள்ளது. இந்த சம்பவத்தில் காசிலிங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக பணியாளர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், காசிலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண்களே கவனம்.! அகல்விளக்கு தீ சேலையில் பரவி பரிதாபம்; தொழிலதிபரின் மனைவி போராடி பலி.!