கிண்டி: மதுபோதையில் தண்டவாளத்தில் அலட்சியம்; நண்பர்கள் இருவர் பலி.!



  in Chennai Guindy 2 youth Dies Hits by Local Train 

நண்பர்கள் இருவர் குடிபோதையில் தண்டவாளத்தில் அலட்சியமாக சென்ற நிலையில், இருவரும் இரயில் மோதி உயிரிழந்தனர்.

சென்னையில் உள்ள பரங்கிமலை - கிண்டி, ஆலந்தூர் பச்சையம்மன் இரயில்வே கேட் பகுதியில், நேற்று இரவு 2 நபர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டு இருந்தனர். இருவரும் மதுபோதையில் தண்டவாளத்தில் அலட்சியமாக சென்றதாக தெரியவருகிறது. 

இரயில் மோதி சோகம்

அப்போது, தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி பயணித்த மின்சார இரயில் மோதியதில், இருவரும் தலையில் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மாம்பலம் இரயில்வே காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: 12 வயது சிறுவனுக்கு ஊஞ்சலில் காத்திருந்த எமன்; பீரோ விழுந்து துடிதுடித்து மரணம்.!

death

காவல்துறை விசாரணை

விசாரணையில், கிண்டியில் உள்ள செக்போஸ்ட் பகுதியில் வசித்து வரும் சந்துரு (வயது 23), அவரின் நண்பர் நரேஷ் (வயது 23) ஆகியோர் பலியானது அம்பலமானது. இதில் சந்துரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருமணமான 8 மாதத்தில், கர்ப்பிணி மனைவியை பரிதவிக்கவைத்து மரணம்; ஆசையை நிறைவேற்ற முயன்று துயரம்.!