புத்தாண்டு கோலம் மீது வண்டி ஓட்டியவருக்கு அரிவாள் வெட்டு.. சென்னையில் பகீர்.! 



  in Chennai Kasimedu Youth Killed by gang for Rangoli Issue 

காசிமேடு பகுதியில் 3 பேர் கும்பலால் இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள காசிமேடு, சிங்கார வேளாண் நகர், முதலாவது தெருவில் வசித்து வருபவர் விஸ்வநாதன். இவரின் மகன் குமரேசன் (வயது 32). இவர் கப்பலில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த புதன்கிழமை அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில், இவரின் வீட்டு வழியாக 3 பேர் கும்பல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளது. 

அப்போது, வீட்டில் கோலம் போடப்பட்டு இருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற கும்பல் காரணமாக கோலம் அழிந்துள்ளது. இதனால் கோலமிட்ட பெண் குமரனை திட்டி இருக்கிறார். குமரனும் பெண்ணிடம் பதில் வாக்குவாதம் செய்துள்ளார்.  

இதையும் படிங்க: #Breaking: கள்ளக்குறிச்சியில் கணவரை இழந்த கைம்பெண் பலாத்காரம், கொலை.. குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்.!

அரிவாளால் சரமாரி வெட்டு

சத்தம் கேட்டு வந்த பெண்ணின் கணவர் பதிலுக்கு பதில் என பேசியதால், இரண்டு குடும்பத்தாரும் தகராறு செய்துள்ளனர். ஒருகட்டத்தில் குமாரனை பெண்ணின் கணவர், உறவினர்கள் அரிவாளால் வெட்டி இருக்கின்றனர். இவர்களிடம் இருந்து குமரன் தப்பி ஓட முற்பட்டுள்ளார்.  

ஒருவர் பலி., 2 பேர் படுகாயம்

சத்தம் கேட்டு வந்த விஸ்வநாதன் (70), ராகேஷ் (34) ஆகியோர் கும்பலை தடுக்க முற்பட்டுள்ளனர். எனினும், இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்து, பின் குமரன் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குமரன், காயமடைந்த விஸ்வநாதன், ராகேஷ் ஆகியோர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் குமரன் உயிரிழந்த நிலையில், பிற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக காசிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், பெண்ணின் கணவர் சரவணன் (வயது 24), ஆகாஷ் (வயது 23), ராஜேஷ் (வயது 26), 16 வயது சிறுவன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: தமிழக வாழ்வுரிமை கட்சிப் பிரமுகர் குத்திக்கொலை; கடலூரில் பரபரப்பு.. வீட்டு முன்பு சுற்றிவளைத்து பயங்கரம்.!