#Breaking: கள்ளக்குறிச்சியில் கணவரை இழந்த கைம்பெண் பலாத்காரம், கொலை.. குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்.!



  in Kallakurichi Widow Woman Rape Murder Case Accuse Arrested 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம், திம்மவராம் பகுதியில் வசித்து வந்த கணவரை இழந்த இளம்பெண், கறவை மாடு வைத்து பிழைப்பு நடத்துகிறார். மாடு கொடுக்கும் பாலை சொசைட்டியில் ஊற்றி, அதில் வரும் வருமானத்தை வைத்து இளம்பெண்ணும், 2 குழந்தைகளும் வசித்து வந்துள்ளனர். 

பெண் பலாத்காரம் & கொலை

கடந்த டிச.26 அன்று பெண் சொசைட்டிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரும்போது, கரும்பு தோட்டத்தில் அரைநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: தமிழக வாழ்வுரிமை கட்சிப் பிரமுகர் குத்திக்கொலை; கடலூரில் பரபரப்பு.. வீட்டு முன்பு சுற்றிவளைத்து பயங்கரம்.!

Murder

காவல்துறை விசாரணை

பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதியான நிலையில், ஒரு வாரம் கடந்தும் காவல்துறைக்கு துப்பு கிடைக்காமல் தவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் மதுபானம் அருந்திய நபர்களுக்கும் வலைவீசி இருந்தனர். இதன்பேரில் உள்ளூரை சேர்ந்த மணி, குமரேசன் என்பவர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வந்தது.

குற்றவாளி கைது

இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் குமரேசன், மதுபோதையில் பெண்ணை அடித்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது அம்பலமானது. பெண்ணை போதையில் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், கழுத்தை நெரித்து பலாத்காரம் நடந்ததால், பெண் உயிரிழந்தது நடந்துள்ளது. குமரேசனை இன்று நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், குற்றம் நடந்தது எப்படி என நேரில் விளக்க அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து குற்றவாளி குமரேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: போதையில் புத்தாண்டு கொண்டாட்டம்.. தட்டிக்கேட்டவர் 3 பேர் கும்பலால் வெட்டிக்கொலை.!