திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அத்தை மக எனக்கு வேண்டாம்?.. பெற்றோரின் வற்புறுத்தலால் மருத்துவ மாணவர் தற்கொலை?.. சென்னையில் சோகம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். இவர் தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பயின்று வருகிறார். கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தவாறு இவர் படித்து வருகிறார்.
இதனிடையே, சம்பவத்தன்று இவரின் அறையில் எந்த விதமான நடமாட்டமும் இல்லை. இதனால் அவரின் நண்பர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அரவிந்தனின் கைகளில் அரைஞாண் கயிறு இருக்கமாக கட்டப்பட்டு, சிரஞ் ஒன்றும் இருந்துள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த கணவன்.. கடன் தொல்லையால் மணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை.!
மாணவர் மர்ம மரணம்
அவரின் மரணம் உறுதி செய்யப்படவே, திருவெல்லிக்கேணி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அரவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அரவிந்தனின் பெற்றோர், அவரின் அத்தை மகளை அரவிந்தனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதில் விருப்பம் இல்லாத அரவிந்தன் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலனில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே அரவிந்தனின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.
இதையும் படிங்க: காதல் தோல்வியால் விரக்தி; காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் பகீர் திருப்பம்.!