கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
சென்னை: மாடிச்சுவரில் அமர்ந்து போன் பேசியதால் விபரீதம்; 24 வயது இளைஞர் தவறி விழுந்து பலி.!

செல்போனில் பேசியபடி மாடியில் இருந்து தவறி விழுந்தவர் மரணித்த சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் தினகரன் (வயது 24). இவர் கார் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: #BigBreaking: ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சக்கட்டம்.. ரூ.60,200/-க்கு விற்பனை.! நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.!
நேற்று காலை நேரத்தில் தனது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்தவர், செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, மாடியில் உள்ள குட்டிசுவற்றில் அலட்சியமாக அமர்ந்து இருந்ததாக தெரியவருகிறது.
மூன்றாவது மாடியில் இருந்து விழுந்தவர் மரணம்
அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்த தினகரன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள பூந்தமல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வீட்டின் மொட்டை மாடிகளில் நின்றபடி செல்போனில் பேசுவோர், அலட்சியமாக செயல்பட வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை: காவல் நிலையம் முன்பு தீக்குளித்த விவகாரம்; படுகாயமடைந்தவர் பரிதாப பலி.!