கள்ளக்காதலனுடன் ஜல்சா.. கணவனை மாட்டிவிட மனைவி எடுத்த அஸ்திரம்.. போலீசுக்கே ட்விஸ்ட் வைத்த பெண்.!



in chennai Tambaram couple Warned By Cops 

 

சென்னையில் உள்ள தாம்பரம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்றுமுன்தினம் நள்ளிரவில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் அதிகாரிகளிடம் பேசினார். கேளம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்குக்கு அருகே, குடியிருப்பு ஒன்றில் 10 கிலோ கஞ்சாவுடன் பெண் தங்கி இருப்பதாகவும், அதனை வேறொரு நபருக்கு கைமாற்றவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

இதனால் உடனடியாக கேளம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். வீட்டின் கதவை தட்டி, அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, ஜோடி மதுபானம் அருந்திவிட்டு உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. அறையில் கஞ்சா ஏதும் கிடைக்காமல், ஜோடியிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இதையும் படிங்க: சென்னையில் கஞ்சா விற்பனை ராஜ்ஜியம்.. இன்ஸ்டாகிராம் காதல் ராணியை கஞ்சாவுடன் தூக்கிய போலிஸ்.!

chennai

விசாரணையில் ஷாக்

மேலும், கஞ்சா குறித்து துப்புக்கொடுத்த பெண் குறித்து விசாரித்தபோது, அவர் ஜோடியாக சிக்கியவர்கள் ஆண் நபரின் மனைவி என்பது உறுதி செய்யப்பட்டது. எதற்காக பொய்யான தகவலை கூறினீர்கள் என பீனிடம் கேட்டபோது, "கணவர் தன்னுடன் வாழ மறுத்த்து, பெண்ணுடன் கள்ளக்காதல் கொண்டு அங்கேயே தங்கிவிடுகிறார். 

இருவரும் அவ்வப்போது வெளியே சென்று உல்லாசமாக இருக்கிறார்கள். அவர்களை சிக்க வைக்கவே இப்படி ஆத்திரத்தில் செய்துவிட்டேன்" என கூறியுள்ளார். இதனால் பேனை எச்சரித்த அதிகாரிகள், இனி இவ்வாறான செயலில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் ஜோடியை முறையற்ற பழக்கத்தை கைவிடுமாறும் எச்சரிக்கப்பட்டது.  
 

இதையும் படிங்க: மதுரவாயல்: இ-பைக் தீப்பிடித்த விவகாரம்; தந்தை, கைக்குழந்தை அடுத்தடுத்து பலி.. தாய் உயிர் ஊசல்.!