சென்னையில் கஞ்சா விற்பனை ராஜ்ஜியம்.. இன்ஸ்டாகிராம் காதல் ராணியை கஞ்சாவுடன் தூக்கிய போலிஸ்.!



in Chennai Trisoolam Cops Arrested Ganja Girl 

சென்னையில் உள்ள திரிசூலம் இரயில்வே கேட் பகுதியில், சந்தேகத்துக்கு இடமான வகையில் பெண் ஒருவர் சுற்றி வந்தார். அவரிடம் காவல் அதிகாரிகள் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமான அதிகாரிகள் பெண்ணிடம் விசாரித்தனர்.

மேலும், அவரின் கைப்பையை சோதித்தபோது, 3 கிலோ அளவிலான கஞ்சா இருந்தது. இதனையடுத்து, உடனடியாக பெண்மணி கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் திரிபுரா மாநிலத்தில் உள்ள உதய்பூர் பகுதியில் வசித்து வரும் பாயல் தாஸ் என்பது உறுதியானது.

chennai

திருணமான பெண்ணுக்கு கணவர், குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் எந்நேரமும் செல்போனில் வீடியோ பதிவிட்டு வந்ததால், கணவருடன் கருத்து வேறுபாடு நிலவி இருக்கிறது. இதனால் ஒருகட்டத்தில் குழந்தையை பெட்ரோல் வீட்டில் விட்டுவிட்டு, சென்னை வந்தவர் கஞ்சா விற்பனையில் களமிறங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: மதுரவாயல்: இ-பைக் தீப்பிடித்த விவகாரம்; தந்தை, கைக்குழந்தை அடுத்தடுத்து பலி.. தாய் உயிர் ஊசல்.!

கடந்த 3 ஆண்டுகளாக பெண்மணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகமான நண்பர்களை காதல் வலையில் வீழ்த்தி, கஞ்சா டெலிவரி பாய்ஸாக மாற்றியது உறுதியானது. மாதத்துக்கு 3 முறை சொந்த ஊர் செல்லும் பெண்மணி, கிலோ கணக்கில் கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி இருக்கிறார்.

இவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: Gold Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு, வெள்ளி விலை ரூ.2000 குறைவு.!