அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
சென்னை: கணவனுக்கு செருப்படி.. கள்ளகாதலருடன் வந்த மனைவியை நடுரோட்டில் குத்திக்கொன்ற கணவர்.!
கள்ளக்காதலை கைவிட்டு வருமாறு மனைவியை கணவர் கண்டிக்க, மனைவி கணவரை செருப்பால் அடித்த சம்பவத்தில், ஆத்திரத்தில் இருந்த கணவர் மனைவியை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி, எல்லிஸ் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 42). இவரின் மனைவி ஜோதி (வயது 27). தம்பதிகளுக்கு ஜெகதீஷ், தனுஷ், ஹரிஷ் என 3 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகள் பிரிந்த நிலையில், 3 மகன்களுடன் ஜோதி தனியாக வசித்து வருகிறார். இவர்கள் மேடவாக்கம், புதுநகர், நான்காவது குறுக்குத்தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
அழைப்பு விடுத்தார்
மேடவாக்கத்தில் செயல்பட்டு வரும் பியூட்டி பார்லரில் ஜோதி அழகுக்கலை நிபுணராக வேலை பார்த்து வருகிறார். இதே பகுதியில் மணிகண்டனின் அக்கா துளசி என்பவரின் மருமகன் கிரிஷ் என்ற கிருஷ்ணமூர்த்தி (வயது 38) வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு - ஜோதிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் மணிகண்டனுக்கு தெரியவரவே, அவர் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நண்பனின் தங்கை குறித்து அவதூறு பேச்சு; முன்னாள் ஊராட்சியை மன்றத் தலைவரின் மகன் வெட்டிக்கொலை.!
கணவருக்கு செருப்படி
ஆனால், ஜோதி மறுப்பு தெரிவிக்கவே, கிருஷ்ணமூர்த்தியுடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரியவருகிறது. நேற்று மாலை ஜெரத்தில் ஜோதியை தொடர்புகொண்ட மணிகண்டன், சபரிமலை பிரசாதத்தை குழந்தைக்கு தர வேண்டும் என கூறியுள்ளார். இதனால் பள்ளிக்கரணைக்கு வந்த ஜோதியிடம் மணிகண்டன் தகராறில் ஈடுபடவே, ஒருகட்டத்தில் ஆத்திரத்தில் ஜோதி கணவரை செருப்பால் தாக்கி இருக்கிறார். பின் புறப்பட்டு சென்றுவிட்டார்.
சரமாரி கத்திக்குத்து
அதே ஆத்திரத்தில் இருந்த ஜோதி, மேடவாக்கம் பகுதிக்கு நேற்று 08:40 மணிக்கு கள்ளகாதலர் கிருஷ்ணமூர்த்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கு இருதரப்பு வாக்குவாதம் ஏற்படவே, மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதியை வயிற்றில் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதனைத்தடுக்க வந்த கிருஷ்ணமூர்த்திக்கும் கத்திக்குத்து விழுந்தது.
கணவர் கைது
கொலை சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ந்துபோன மக்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜோதி உயிரிழந்தார். கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பொதுமக்களில் பிடிக்கப்பட்ட மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பைக் திருட்டில் நண்பர்களுக்குள் சண்டை; 17 வயது சிறுவன் கொலை.. இரண்டு துண்டாகிய உடல்.!