பைக் திருட்டில் நண்பர்களுக்குள் சண்டை; 17 வயது சிறுவன் கொலை.. இரண்டு துண்டாகிய உடல்.!



in Tirupattur Natrampalli 17 Year Old Boy Killed 


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி, நெக்குந்தி பகுதியில் சிறுவன் ஒருவனின் உடல் இரண்டு துண்டாகி கிடந்தது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த இரயில்வே காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிறுவன் கொலை செய்யப்பட்டு உடல் தண்டவாளத்தில் வீசப்பட்டது அம்பலமானது. மேலும், தண்டவாளத்தில் இருந்த சிறுவனின் உடலில் இரயில் ஏறி சென்றதால், உடல் இரண்டு துண்டாகியது உறுதி செய்யப்பட்டது. 

Tirupattur

5 பேர் கும்பல் கைது

இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர். அம்பனூர் பழைய காலனி பகுதியில் வசித்து வரும் ஜெயராஜ் என்பவரின் மகன் நரசிம்மன் (வயது 17). சிறுவன் பைக் திருட்டு விவகாரத்தில் கொல்லப்பட்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: போதையில் அம்மாவிடம் அனுதினம் தகராறு; தந்தையை கட்டையால் தாக்கி போட்டுத்தள்ளிய மகன்.!

சிகரலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமானை கைது செய்து நடத்திய விசாரணையில், பைக் திருட்டு விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே நடந்த மோதலில் நரசிம்மன் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் அப்துல் ரகுமான் உட்பட ஐவரை கைது செய்த காவல்துறையினர், வேலூர் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளி ஒருவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நள்ளிரவில் பெண்ணை நோட்டமிட்ட 2 பேர்.. 10 இடங்களில் சரமாரியாக குத்திக்கொலை.!