53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
படிக்கட்டில் தொங்கியபடி அசால்ட் பயணம்; ரீல்ஸ் வீடியோ எடுத்து கதறிய நட்புகள்.. கேடில் முடிந்த கொண்டாட்டம்.!
ரீல்ஸ் மோகம் காரணமாக கல்லூரி மாணவரின் உயிர் ஊசலாடுகிறது.
சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், வெவ்வேறு வழித்தடங்களில் புறநகர் மின்சார இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த இரயில் சேவையை தினமும் பல இலட்சக்கணக்கான பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை நகரின் முக்கிய உயிர்நாடியாகவும் மின்சார இரயில் போக்குவரத்து சேவை கவனிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: காதலின்போதே நெருக்கம்.. வீடியோ எடுத்து ரூ.20 இலட்சம் கேட்டு மிரட்டிய காதலன்.. நிச்சயமானபின் கொடுமை.!
பூமியின் பாரம் குறைந்தது 😌 pic.twitter.com/kZqYiT7JhV
— சங்கர் ரஜினி ரசிகன் (@Rajinirasigan53) October 13, 2024
இந்நிலையில், புறநகர் மின்சார இரயில் பயணம் செய்த கல்லூரி மாணவர் ஓருவர், மின்கம்பியில் மோதி படுகாயம் அடைந்தார். இரயிலுக்குள் ஆட்களே இல்லாமல் வெறும் பெட்டியாக இருந்தபோதிலும், இருக்கையில் அமர்ந்து அவர் பயணம் செய்யவில்லை.
ரீல்ஸ் மோகம் காரணமாக படிக்கட்டில் கம்பியை பிடித்து தொங்கிக்கொண்டு பயணித்தவர், ஒருகட்டத்தில் தலையை வெளியே நீட்டியபடி சென்றார். அப்போது, அவரின் பின் தலையில் மின்கம்பி தட்டி, ஓடும் இரயிலில் இருந்து கீழே விழுந்தார். அவர் மாதவரம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ பதிவுகளின்படி அவரின் பின் தலை, கை-கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி உல்லாசம்.!! கட்டாய கருக்கலைப்பு.!! தனியார் நிறுவன ஊழியர் கைது.!!