கடலூர்: 10 வயது சிறுமி பலாத்காரம்., 17 வயது மாணவர் போக்ஸோவில் கைது.!

12 ம் வகுப்பு மாணவர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் 10 வயதுடைய சிறுமி, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறையுடன் இருந்துள்ளார். அவரை சிறுமியின் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: "கூலி வேலைக்கு போ" - மகன் திட்டியதால் தந்தை மனமுடைந்து தற்கொலை.!
அங்கு சிறுமி பலாத்காரத்தை எதிர்கொண்டு இருப்பதாக மருத்துவர்கள் தாயிடம் கூறியுள்ளனர். மேலும், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி பலாத்காரம் உறுதி
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில், அவரது பெற்றோரிடம் புகார் பெற்றுக்கொண்டனர்.
புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி, 17 வயதுடைய 12 ம் வகுப்பு மாணவரை சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில் கைது செய்தனர். போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன், தற்போது சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: வாடகை கேட்ட உரிமையாளருக்கு ஆபாச அர்ச்சனை.. திருநங்கையை கட்டளையால் அடித்துக்கொன்ற பயங்கரம்.!