"கூலி வேலைக்கு போ" - மகன் திட்டியதால் தந்தை மனமுடைந்து தற்கொலை.!



in Cuddalore Virudhachalam Father Dies by Suicide 

 

மகன் திட்டியதால் ஆவேசமடைந்த தந்தை உயிரைத்துறந்தார். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், கருவேப்பிலங்குறிச்சி, ராஜேந்திரப்பட்டினம் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் (65). இவரின் மகன் அசோக் குமார் (வயது 33).

இதையும் படிங்க: வாடகை கேட்ட உரிமையாளருக்கு ஆபாச அர்ச்சனை.. திருநங்கையை கட்டளையால் அடித்துக்கொன்ற பயங்கரம்.!

சுப்பிரமணியன் வயது மூப்பு காரணமாக கிடைத்த வேலையை செய்து, அவ்வப்போது வீட்டில் ஓய்வெடுத்தும் வந்துள்ளார். இதனிடையே, வீட்டில் இருந்த தந்தையை, மகன் எங்காவது சென்று கூலி வேலை செய்து வா என திட்டி இருக்கிறார். 

Cuddalore

வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை

தனது மகன் தன்னை இப்படி திட்டிவிட்டாரே என மனமுடைந்துபோன சுப்பிரமணியன், வீட்டின் வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விசயம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலை அறிந்து வந்த காவல்துறையினர், சுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மாணவிக்கு பாலியல் தொல்லை; லேப் அசிஸ்டன்ட் கைது.! சஸ்பெண்ட் செய்து உத்தரவு.!