ரூ.110 நோட்டு கொடுத்து சில்லறை வாங்கிச் சென்ற மர்ம ஆசாமி; பெட்டிக்கடைக்காரர்களே உஷார்.!



  in Erode Fake Note Cheating 

குழந்தைகள் விளையாடும் பணத்தை வைத்து வயதான தம்பதியை ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், முதுஷா பகுதியில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். பன்னீர் செல்வமும், அவரின் மனைவியும் கடையை கவனித்து வந்துள்ளனர். 

இதனிடையே, நேற்று இரவு நேரத்தில் திடீர் மின்வெட்டு அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. அப்போது கடைக்கு வந்த நபர், பணம் கொடுத்து சில பொருட்கள் வாங்கிவிட்டு, மீதி சில்லரையும் வாங்கிச் சென்றுள்ளார். 

இதையும் படிங்க: அரை நிர்வாண கோலத்துடன் காவலர்களை வசைபாடிய சஸ்பெண்ட் காவலர்.. கள்ளக்காதலி புகாரால் ஆத்திரம்.! 

போலி நோட்டு கொடுத்து ஏமாற்றம்

வெளிச்சம் இல்லாத காரணத்தால் பணத்தை வாங்கி சில்லறை கொடுத்த நிலையில், மின்சாரம் வந்ததும் பணத்தை பார்த்தபோது, அது குழந்தைகள் விளையாடும் ரூ.110 நோட்டு என்பது தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தங்கையை காதலித்த இளைஞர் வெட்டிக்கொலை; சமாதானம் பேச அழைத்து கொடூரம்.. இன்ஸ்டா காதல் பயங்கரம்.!